ஒரு நாள் போட்டி இந்தியா நம்பர் 1

துபாய்: ஐசிசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான ரேங்கிங் பட்டியலில் இந்திய ஆடவர் அணி, தொடர்ந்து முதலிடத்தில் நீடிப்பதாக ஐசிசி அறிவித்துள்ளது. ஐசிசி ஒரு நாள் போட்டிகளில் அணிகள் பெற்ற புள்ளிகள் அடிப்படையில் புதிய ரேங்கிங் பட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டது.

அதில் இந்திய அணி 118 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. நியூசிலாந்து கிரிக்கெட் அணி 113 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் உள்ளது. ஒரு நாள் போட்டிகளில் உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஆஸ்திரேலியா அணி, 109 புள்ளிகளுடன் 3ம் இடத்தை வகிக்கிறது. தென் ஆப்ரிக்கா 102 புள்ளிகளுடன் 4, பாகிஸ்தான் 98 புள்ளிகளுடன் 5, இலங்கை 96 புள்ளிகளுடன் 6ம் இடத்தில் உள்ளன. ஆப்கானிஸ்தான் 7, இங்கிலாந்து 8, வங்கதேசம் 9, வெஸ்ட் இண்டீஸ் 10ம் இடங்களில் தொடர்கின்றன.

இது தொடர்பாக ஐசிசி நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘ஆடவர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி, உச்ச நிலையில தொடர்ந்து நீடிக்கிறது. 2வது இடத்தில் உள்ள நியூசிலாந்து அணிக்கும், இந்திய அணிக்கும் இடையே 5 புள்ளிகள் வித்தியாசம் உள்ளது’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories: