சிட்னி: ஆஸ்திரேலியாவை சேர்ந்த டென்னிஸ் ஜாம்பவான் மால் ஆண்டர்சன் (91) நேற்று காலமானார். கடந்த 1957ம் ஆண்டு, அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ரேங்கிங் பெறாத வீரராக களமிறங்கி சாம்பியன் பட்டம் முதல் வீரர் என்ற சாதனையை மால் ஆண்டர்சன் படைத்திருந்தார். தவிர, 3 முறை இரட்டையர் பிரிவு போட்டிகளில் சாம்பியன் பட்டங்களை அவர் பெற்றுள்ளார். டேவிஸ் கோப்பை போட்டிகளிலும், ஆண்டர்சன் இரு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவுக்கு டென்னிஸ் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
