உலக ஸ்குவாஷ் போட்டி; வீர் சோத்ரானி தோல்வி

கிஸா: எகிப்தில் நடந்து வரும் உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் ஆடவர் பிரிவு 2வது சுற்றுப் போட்டியில் இந்தியாவை சேர்ந்த முன்னணி வீரர் வீர் சோத்ரானி, எகிப்தை சேர்ந்த உலகின் நம்பர் 1 வீரரும் நடப்பு சாம்பியனுமான மொஸ்தபா அஸால் உடன் மோதினார். இப்போட்டியில் சிறப்பாக ஆடிய மொஸ்தபா, 11-5, 11-2, 11-4 என்ற நேர் செட்களில் அட்டகாச வெற்றியை பதிவு செய்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார். முன்னதாக முதல் சுற்றுப் போட்டிகளில் இந்திய வீரர் அபய் சிங், ரமித் தாண்டன், வேலவன் செந்தில் குமார் ஆகியோர் தோல்வியை தழுவி வெளியேறினர்.

Related Stories: