சென்னை: தமிழக முதல்வர் விஜய், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு அரசியல் நாகரிகத்தின் முதிர்ச்சிக்கு அடையாளம் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு: முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்களை சந்தித்து வாழ்த்துகளைப் பெறும் முதல்வர் விஜய்யின் இந்த அணுகுமுறை அரசியல் நாகரிகத்தின் முதிர்ச்சிக்கு அடையாளம். அவரை ஆரத்தழுவி வரவேற்ற முன்னாள் முதல்வர், துணை முதல்வருக்கு எமது மனம் நிறைந்த பாராட்டுகள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
