கவுகாத்தி: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று சென்னையின் எப்சி – நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதவுள்ளன. ஐஎஸ்எல் கால்பந்து தொடர், நாட்டின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகின்றன. இதில் இந்தியாவை சேர்ந்த முன்னணி கால்பந்து அணிகள் மோதி வருகின்றன. இன்று நடக்கும் போட்டியில் சென்னையின் எப்சி – நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதவுள்ளன. கடந்த இரு போட்டிகளில் தொடர் தோல்வியை சந்தித்துள்ள சென்னை அணி, இன்றைய போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் தீவிரம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இரு அணிகளும் இதுவரை மோதிய போட்டிகளில் சென்னை 11 முறையும், நார்த்ஈஸ்ட் யுனைடெட் 8 முறையும் வெற்றி வாகை சூடியுள்ளன. சென்னை அணி, ஐஎஸ்எல் தொடரில் இதுவரை 11 போட்டிகளில் ஆடி 2 வெற்றி, 3 டிரா, 6 தோல்விகளுடன் 9 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் 13வது இடத்தில் உள்ளது. நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணி, 11 போட்டிகளில் 2 வெற்றி, 4 டிரா, 5 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று பட்டியலில் 12வது இடத்தில் உள்ளது. பட்டியலில் ஈஸ்ட் பெங்கால் அணி, 21 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஜாம்ஷெட்பூர் அணி 21 புள்ளிகளுடன் 2ம் இடத்திலும், மோகன்பகான் அணி 20 புள்ளிகளுடன் 3ம் இடத்திலும் உள்ளன.
