பஞ்சாப் அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ரன் வேட்டை

 

ஐதராபாத்: பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் டி20 போட்டியில் நேற்று, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் விளாசியது. ஐபிஎல் தொடரின் 49வது போட்டி ஐதராபாத்தில் நேற்று நடந்தது. அதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதையடுத்து, சன்ரைசர்ஸ் அணியின் துவக்க வீரர்களாக அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். இருவரும், துவக்கம் முதல் பஞ்சாப் பந்து வீச்சை துவம்சம் செய்து அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்டனர். அதனால், 3.2 ஓவரில் சன்சைர்ஸ் அணி 50 ரன்களை எட்டியது. லாக்கி பெர்குசன் வீசிய அந்த ஓவரில் அபிஷேக் சர்மா (13 பந்து, 35 ரன்) ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ஹெட் (19 பந்து, 38 ரன்), யுஸ்வேந்திர சஹல் பந்தில் அவுட்டானார். அதன் பின், இஷான் கிஷண், ஹென்றிச் கிளாசன் இணை சேர்ந்து ரன் வேட்டையாடினர்.

இந்த இணை 48 பந்துகளில் 88 ரன்கள் விளாசிய நிலையில், 3வது விக்கெட்டாக, 15வது ஓவரில் இஷான் கிஷண் (32 பந்து, 4 சிக்சர், 2 பவுண்டரி, 55 ரன்), அர்ஷ்தீப் சிங் பந்தில் விக்கெட்டை இழந்தார். பின்னர், கிளாசனுடன் நிதிஷ் குமார் ரெட்டி இணை சேர்ந்தார். 17.1 ஓவரில் சன்ரைசர்ஸ், 200 ரன்களை எட்டியது. அதே ஓவரில் கிளாசன் அரை சதம் தொட்டார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய இந்த இணை பஞ்சாப் பந்துவீச்சை துவம்சம் செய்தது. கடைசி பந்தில் கிளாசன் (43 பந்து, 4 சிக்சர், 3 பவுண்டரி, 69 ரன்) அவுட்டானார். 20 ஓவர் முடிவில் சன்ரைசர்ஸ், 4 விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் விளாசியது. அந்த அணியின் நிதிஷ் குமார் 13 பந்தில் 29 ரன்னுடன் களத்தில் இருந்தார். பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப் சிங், பெர்குசன், சஹல், விஜய்குமார் வைஷாக் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

 

Related Stories: