ஆஸி யு-18 அணிகளுடன் ஹாக்கி போட்டி: இந்திய வீரர், வீராங்கனை பட்டியல் வெளியானது

போபால்: ஆஸ்திரேலியாவை சேர்ந்த 18 வயதுக்கு உட்பட்ட ஆடவர் மற்றும் மகளிருடன் மோதும் இந்திய ஆடவர், மகளிர் ஹாக்கி அணிகள் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஜப்பானின் காகமிகாஹரா நகரில், வரும் 29ம் தேதி முதல் ஜூன் 6ம் தேதி வரை, 18 வயதுக்கு உட்பட்ட ஆடவர், மகளிர் பங்கேற்கும் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டிகள் நடைபெற உள்ளன. அதற்கு முன்னதாக, மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில், ஆஸ்திரேலியாவை சேர்ந்த யு-18 ஆடவர், மகளிர் அணிகள், இந்திய ஆடவர், மகளிர் அணிகளுடன் 4 போட்டிகளில் ஆட உள்ளன. வரும் 15ம் தேதி முதல் 20ம் தேதி வரை இப்போட்டிகள் நடைபெற உள்ளன.

இதில் பங்கேற்கும் இந்திய வீராங்கனைகள் பற்றிய அறிவிப்பை ஹாக்கி இந்தியா நேற்று வெளியிட்டது. அதன்படி இந்திய மகளிர் அணியின் கேப்டனாக முன்கள வீராங்கனை ஸ்வீட்டி குஜூர் நியமிக்கப்பட்டுள்ளார். தவிர, கோல்கீப்பர்களாக மஹாக் பரிஹார், ஹேரி, கிலி குமாரி, தடுப்பாட்டக்காரர்களாக சுகன் சங்கா, நீலம் டோனோ, ரூபினா பாக்ஸ்லா, கிரண் எக்கா, திவ்யா யாதவ் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய ஆடவர் அணிக்கு கேப்டனாக கேதன் குஷ்வாஹா நியமிக்கப்பட்டுள்ளார். கோல் கீப்பர்களாக சவன் குமார், ஆயுஷ் ரஜக், விஷால் படா, தடுப்பாட்டக்காரர்களாக அன்ஸ் பஹுத்ரா, ஆஷிஸ் தனி பூர்தி, அர்மான் சோரேங், தீபக் பிரகாஷ் டோபோ உள்ளிட்டோரும், முன்கள வீரர்களாக ஆகாஷ் தீப், ஷாருக் அலி, பிரஹ்லாத் ராஜ்பார் உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர்.

Related Stories: