இந்தியாவில் மீண்டும் குளோபல் செஸ் லீக்

 

புதுடெல்லி: ஃபிடே, டெக் மஹிந்திரா இணைந்து உருவாக்கிய குளோபல் செஸ் லீக் 4வது தொடர், இந்தியாவில் நடத்தப்படும் என அதன் அமைப்பாளர்கள் நேற்று அறிவித்தனர். போட்டிகள் நடைபெறும் இடம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குளோபல் செஸ் லீக் 3வது தொடர், கடந்தாண்டு டிசம்பரில் மும்பையில் நடத்தப்பட்டது. அதில், ஆல்பைன் எஸ்ஜி பைபர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் தழைத்தோங்கி வரும் செஸ் விளையாட்டுகளை மேலும் செம்மைப்படுத்தும் நோக்கில் இப்போட்டிகள் நடத்தப்படுவதாக அமைப்பாளர்கள் கூறியுள்ளனர்.

Related Stories: