திருவாரூர், மே 8: ஒன்றிய அரசை கண்டித்து திருவாரூரில் நேற்று ரயில் நிலையம் முன்பாக கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இளைஞர்களது எதிர்காலத்தை பாதிக்கும் ரயில்வே பணியிட குறைப்பு முயற்சியினை கைவிட வேண்டும், பொதுமக்களையும், வணிகர்களையும் கடுமையாக பாதித்துள்ள சிலிண்டர் விலை ஏற்றத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல் ஆகிய கட்சிகளின் சார்பில் திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டமானது நேற்று நடைபெற்றது.
மாவட்ட செயலாளர்கள் முருகையன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), கேசவராஜ் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), பாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்) மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர்கள் தங்க.தமிழ்செல்வன், வெற்றி, உலகநாதன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நாகை எம்.பி செல்வராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில கட்டுபாட்டுகுழு செயலாளர் பழனிசாமி மற்றும் திருத்துறைப்பூண்டி எம்.எல்.ஏ மாரிமுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலகுழு உறுப்பினர் நாகராஜன், விசிக மண்டல செயலாளர் இடிமுரசு உட்பட பலர் கலந்துகொண்டனர்.
எலுமிச்சை ஜூஸ், இளநீர்,மோர், புளித்த சோற்று நீர் மற்றும் பழச்சாறுகளை பருகி நீரிழப்பை தவிர்க்க வேண்டும்.
