புதுக்கோட்டை, மே 8: போலீசில் நடைமுறையில் இருந்த ஆர்டர்லி முறையினை முற்றிலும் ஒழிப்பதற்காக மாவட்ட அளவிலான குழு அமைக்க ஆணையிடப்பட்டதன் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரின் செயல்முறை ஆணையின்படி மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டு ஆணையிடப்பட்டுள்ளது. இந்நிலையில் போலீசில் ஆர்டர்லி முறை குறித்த புகார்களை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரிடம் மனுவாயிலாகவும் அல்லது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது)-இன் தொலைபேசி எண்.9445008146 அல்லது < mailto:pag.pdk@tn.gov.in > என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் புகார் தெரிவிக்கலாம் என்று புதுக்கோட்டை நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
