திருச்சி, மே 8: சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்ததை அடுத்து தேர்தல் நடத்தை விதிகள் திரும்பபெறப்பட்டதால் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 11ம் தேதி குறைதீர் கூட்டம் நடைபெறும் என மாவட்ட கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திருச்சி கலெக்டர் சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய தேர்தல் ஆணையம், 2026-தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பை அறிவித்ததை தொடா்ந்து கடந்த மார்ச்15 முதல் தோ்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலில் இருந்தது. அதன் அடிப்படையில் 2026ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தோ்தல் முடிவடைந்த நிலையில், தற்போது நடத்தை விதிகள் இந்திய தோ்தல் ஆணையத்தால் நேற்று (மே 7) முதல் விலக்கி கொள்ளப்பட்டுள்ளது. எனவே திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் வரும் 11ம் தேதி முதல் பிரதி வாரம் திங்கள்கிழமை தோறும் மாவட்ட கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வழக்கம்போல் நடைபெறும் என கலெக்டர் சரவணன் தொிவித்துள்ளார்.
