பழைய கலெக்டர் அலுவலகத்தில் கனமழைக்கு சில்வர் ஓக் மரம்முறிந்து விழுந்தது

 

தர்மபுரி, மே 8: தர்மபுரி மாவட்ட, பழைய கலெக்டர் அலுவலகம் பின்புறம் கூடுதல் கட்டிடம் உள்ளது. இக்கட்டிடத்தில் விஏஓ உள்ளிட்ட அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
இக்கட்டிடத்தை சுற்றி ஏராளமான உயர்ந்த மரங்கள் உள்ளன. நேற்று முன்தினம் காற்றுடன் கன மழை பெய்தது. இந்த மழை, காற்றுக்கு கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிடத்தின் நுழைவாயில் முன்பு இருந்த சில்வர் ஓக் மரம் வேருடன் முறிந்து விழுந்தது. இந்த மரத்தை பாதுகாப்பாக அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: