தேசிய அறிவியல் தினவிழா

கொடைக்கானல், மார்ச் 1: கொடைக்கானல் வானிலை ஆராய்ச்சி மையத்தில் தேசிய அறிவியல் தினவிழா நடந்தது. இதை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஓவியப் போட்டி, கட்டுரைப் போட்டி, பேச்சுப்போட்டி உள்ளிட்ட பல போட்டிகள் அறிவியலை மையமாக கொண்டு, இணையதளம் வழியாக நடத்தப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவிற்கு கொடைக்கானல் போலீஸ் டிஎஸ்பி ஆத்மநாதன் தலைமை வகித்து மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். கொடைக்கானல் வானிலை ஆராய்ச்சி மையவிஞ்ஞானி குமரவேல் வரவேற்றார். விஞ்ஞானி எபினேசர் முன்னிலை வகித்தார். இந்த விழாவில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். விஞ்ஞானி செல்வேந்திரன் நன்றி கூறினார். தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளுக்கு பிரபு ராம்குமார், ஆனந்த், உதயகுமார், உள்ளிட்டோர் நடுவர்களாக இருந்தனர்.

Related Stories:

>