கவாத்து செய்யப்பட்ட ரோஜா செடிகளுக்கு உரமிட்டு பராமaரிக்கும் பணிகள் தீவிரம்

ஊட்டி,மார்ச்1: ஊட்டி ரோஜா பூங்காவில் கவாத்து செய்யப்பட்ட செடிகளுக்கு உரமிட்டு பராமரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை கட்டுபாட்டில் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா உள்ளிட்ட பல்வேறு பூங்காக்கள் உள்ளன. கோடை சீசன் சமயத்தில் வர கூடிய சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் நோக்கில் பூங்காக்களில் மலர் நடவு மற்றும் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

கோடை விழா நிகழ்ச்சிகளில் ஒன்றாக ஊட்டி விஜயநகரம் பகுதியில் உள்ள ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக ரோஜா கண்காட்சி ரத்து செய்யப்பட்டது. இம்முறை மிகவும் சிறப்பாக நடத்த தோட்டக்கலைத் துறை திட்டமிட்டு பூங்காவை தயார் செய்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக ரோஜா கண்காட்சிக்காக தயார்படுத்தும் வகையில் ரோஜா மலர் செடிகளை கவாத்து செய்யும் பணிகள் கடந்த மாதம் 12ம் தேதி துவங்கியது. பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிக்க வசதியாக மேற்புறம் பூக்கள் பூத்து குலுங்குகின்றன. மற்ற இடங்களில் கவாத்து பணிகள் நடைபெற்று வருகின்றன. இவை விரைவாக துளிர்விடும் வகையில் வெட்டப்பட்ட பகுதியில் மருந்துகள் தெளிக்கப்பட்டுள்ளது. தற்போது கவாத்து செய்யப்பட்ட செடிகள் வளர்ச்சிக்கு ஏதுவாக சாண உரமிட்டு பராமரிக்கும் பணிகளில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories:

>