என்ஜின் கோளாறால் 2 மணி நேரமாக பிருந்தாவன் விரைவு ரயில் நடுவழியில் நிறுத்தம்!

சென்னை: அரக்கோணம் அருகே என்ஜின் கோளாறு காரணமாக 2 மணி நேரமாக பிருந்தாவன் விரைவு ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற பிருந்தாவன் விரைவு ரயில் என்ஜின் கோளாறு ஏற்பட்டதால் நடுவழியில் நிறுத்தப்பட்டது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து தினமும் இயக்கப்படும் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று வழக்கம்போல் காலை 7.40 மணிக்கு புறப்பட்டது. இந்த ரயில் அரக்கோணம் அருகே உள்ள மோசூர் ரயில் நிலையம் அருகே வந்துகொண்டிருந்தபோது திடீரென என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நடுவழியில் நிறுத்தப்பட்டது.

இதுதொடர்பாக தகவலறிந்த ரயில்வே ஊழியர்கள் எஞ்சினை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் எஞ்சினை சரி செய்ய முடியாததால் மோசூர் ரயில் நிலையத்திலிருந்து பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயில் மீண்டும் அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு மாற்று என்ஜின் பொருத்தப்படும் பணி நடைபெற்றது.

இதன் காரணமாக 2 மணி நேரமாக கால தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து சென்னையிலிருந்து அரக்கோணம், காட்பாடி வழியாக பெங்களூரு செல்லக்கூடிய பயணிகள் அவதிக்குள்ளாகினர். மாற்று என்ஜின் பொருத்தப்படும் பணி நிறைவு பெற்று ரயில் புறப்பட வாய்ப்பு இருப்பதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: