மதுரை: திருப்பரங்குன்றம் அருகே நிலையூரில் நடந்த இரட்டை கொலை வழக்கில் 10 பேரை போலீசார் கைது செய்தனர். போதையில் ஏற்பட்ட தகராறில் யார் பெரிய ஆள் என்ற மோதலில் இரட்டை கொலை நடந்தது என விசாரணையில் தெரியவந்துள்ளது. மதுரை விமான நிலையத்தின் பின்புறம் சம்பக்குளம் விலக்கு அருகே கௌதமன், பத்மநாபன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் திருப்பரங்குன்றம் நிலையூர் பகுதியைச் சேர்ந்த சேதுபதி, பாண்டித்துரை உள்பட 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
