கம்பத்தின் மீது மோதி சேதமான கார்: காயத்துடன் உயிர் தப்பிய டாக்டர்

 

அந்தியூர்: ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த புஞ்சைதுறையம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மெய்காந்தன் (26). இவர் மருத்துவ படிப்பு முடித்துள்ளார். இவர் நேற்று ஆப்பக்கூடலில் இருந்து அத்தாணி நோக்கி காரில் சென்றுள்ளார். அப்போது நள்ளிரவு 1.30 மணி அளவில் அந்தியூர்- அத்தாணி மெயின் ரோடு அருகே சென்றபோது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான மின்கம்பம் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

இதில், மெய்காந்தனுக்கு தலையின் முன்பக்க பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். இத்தகவல் அறிந்த ஆப்பக்கூடல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதில், இரவு நேரத்தில் தூக்க கலக்கத்தில் அதிவேகமாக வந்ததால், விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: