சென்னை: தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, ராகுல் காந்திக்கு த.வெ.க. தலைவர் விஜய் நன்றி தெரிவித்தார். மாநில முன்னேற்றம், மக்களின் நலத்திட்டங்களுக்காக கவனம் செலுத்துவோம் என கூறிய மோடிக்கு விஜய் நன்றி தெரிவித்துள்ளார். அரசியலுக்கு அப்பால் தமிழக மக்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தருவோம் என கூறிய ராகுலுக்கு விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.
