பணிநிரந்தரம் செய்யக்கோரி டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

பெரம்ப லூர்,பிப்.26: பணி நிரந்தரம் செய்ய வேண்டும், காலமுறை ஊதியம் வழங்கிட வேண் டும், சுழற்சி முறையில் பணியிட மாறுதல் வழங்க வேண்டும், விற்பனை நேரத்தைக் குறைக்க வேண்டும், பாதுகாப்பற்ற கடைகளை மூடவேண்டும், பணிப்பாதுகாப்பு மற்றும் பணி வரன்முறை செய்திட வேண்டும் என 18ஆண்டுக ளாக டாஸ்மாக்கில் தற்கா லிகமாகப் பணிபுரியும் ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூர், அரியலூர் ஒருங்கி ணைந்த மாவட்ட டாஸ்மாக் பணியாளர்கள் கூட்டுக் குழு சார்பாக, பெரம்பலூர்- வடக்குமாதவி சாலையிலு ள்ள டாஸ்மாக் மாவட்ட மே லாளர் அலுவலகம் முன்பு நேற்று (25ம்தேதி) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்ப லூர் மாவட்டத் தலைவர் கலியமூர்த்தி, அரியலூர் மாவட்டச் செயலாளர் சங்கர் ஆகியோர் கூட்டாகத் தலைமை வகித்தனர். பெர ம்பலூர் மாவட்டச் செயலா ளர் மதியழகன், அரசுப் பணியாளர் சங்க துணைத் தலைவர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகி த்தனர். மாநில துணைச் செயலாளர் கொளஞ்சி, விற்பனையாளர் சங்கப் பொருளாளர் கொளஞ்சி யப்பன் ஆகியோர் சிறப்பு ரையாற்றினர். முடிவில் கிருஷ்ணராஜ் நன்றி கூறினார்.

Related Stories:

>