கீழ்வேளூர் ஒன்றிய அலுவலகத்தில் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்

கீழ்வேளூர், பிப். 26: நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றிய அலுவலகத்தில் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி தலைமை வகித்தார். மாவட்ட சுகாதார பணிகள் திட்ட இயக்குநர் ராஜா, மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அதிகாரி டாக்டர் லியாகத் அலி முன்னிலை வகித்தனர். முகாமில் வருவாய்துறை, ஊரக வளர்ச்சித்துறை, கல்வித்துறை அலுவலகங்களில் பணிபுரியும் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அருண்பிரபு, தாசில்தார் மாரிமுத்து, ஊராட்சி ஒன்றிய ஆணையர் மீனா, வட்டார வளர்ச்சி அலுவலர் தியாகராஜன், சுகாதாரத்துறை செவிலியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories:

>