கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு முகாம்

காரைக்கால், பிப். 26: காரைக்கால் நகராட்சி அலுவலகத்தில் முன்கள பணியாளர்கள், துப்புரவு தொழிலாளர்கள், ஊழியர்களிடம் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளும் அவசியம் குறித்து நலவழித்துறை துணை இயக்குனர் மோகன்ராஜ் தலைமையில் அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் நெடுங்காடு மற்றும் கோட்டுச்சேரி ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று நலவழித்துறை அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

Related Stories:

>