6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே புதிய ஆதார் வழங்க மனு

புதுடெல்லி: நாட்டில் சட்டவிரோதமாக ஊடுருவுபவர்கள் ஆதார் அட்டை பெறுவதை தடுக்க, 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே புதிதாக ஆதார் வழங்க உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய் உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜாய்மால்யா பாக்சி அமர்வு, ‘‘இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்திடமும் அரசின் கவனத்திற்கும் கொண்டு செல்லுங்கள்’’ என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

Related Stories: