பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை, தென்காசி மாவட்டத்தில் இன்று சலூன் கடைகள் அடைப்பு

தென்காசி, பிப். 26:  நெல்லை, தென்காசி மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை அடைத்து சலூன் கடைகளை அடைத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்துகின்றனர்.மருத்துவர் சமூக மக்களுக்கு 5 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும். மருத்துவர் சமூக மக்கள் மீது தாக்குதல் நடத்துபவர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டப்பாதுகாப்பு வழங்க வேண்டும். தியாகி விஸ்வநாத தாசுக்கு சென்னை மாதவரத்தில் சிலை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம், முடிதிருத்தும் தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று 3 லட்சம் சலூன் கடைகள் அடைத்து உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.

இதன் ஒரு பகுதியாக தென்காசியில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெறும் போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரவி தலைமை வகிக்கிறார். மாவட்ட செயலாளர் பண்டார சிவன், பொருளாளர் முத்தையா முன்னிலை வகிக்கின்றனர். உண்ணாவிரத போராட்டம் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் சலூன் கடைகள் அடைக்கப்பட்டிருக்கும் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர். இதேபோல் நெல்லை மாவட்டத்திலும் இன்று அனைத்து சலூன் கடைகளையும் அடைத்து தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

Related Stories: