பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லையில் இன்று சலூன்கள் அடைப்பு

நெல்லை, பிப். 26:  நெல்லை மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சலூன் கடைகளை இன்று அடைத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்துகின்றனர்.மருத்துவர் சமூக மக்களுக்கு 5 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும். மருத்துவர் சமூக மக்கள்

மீது தாக்குதல் நடத்துபவர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டப்பாதுகாப்பு வழங்க வேண்டும். தியாகி விஸ்வநாத தாசுக்கு சென்னை மாதவரத்தில் சிலை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம், முடிதிருத்தும் தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று 3 லட்சம் சலூன் கடைகள் அடைத்து உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. இதன் ஒரு பகுதியாக இதேபோல் நெல்லை மாவட்டத்திலும் இன்று 1800 சலூன் கடைகளை அடைத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

Related Stories:

>