குன்னூரில் தி.மு.க.வினர் பிரசாரம்

குன்னூர், பிப்.26: குன்னூர் நகர தி.மு.க. சார்பில் ஸ்டாலின் தான் வராரு, விடியல் தர போறாரு பிரசார நிகழ்ச்சி குன்னூர் வி.பி தெரு கலைஞர் திடலில் நேற்று நடந்தது. குன்னூர் நகர செயலாளர் ராமசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முபாரக் பிரசார நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். இதில், மாநில சிறுபான்மை பிரிவு துணைச்செயலாளர் அன்வர் கான் பொதுக்குழு உறுப்பினர்கள் சதக்கத்துல்லா, வெங்கடேஷ், சீலா கேத்தரின், தலைமை கழக பேச்சாளர் மற்றும்  மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் முபாரக், தலைமை கழக பேச்சாளர் ஜாகீர், நகர அவைத்தலைவர் தாஸ், நகர பொருளாளர் ஜெகநாத் ராவ், நகர இளைஞரணி அமைப்பாளர் பத்மநாதன், பழத்தோட்டம் ராமசாமி, மாவட்ட அணிகளின் நிர்வாகிகள் விஜயராஜ், ரமேஷ், காளிதாஸ், நகர அணிகளின் நிர்வாகிகள் செலின், பிரதீப், சந்திப், கார்த்திக், கிளைக் கழக நிர்வாகிகள் ஜெய்பிரகாஷ், சிக்கந்தர், சண்முகம், ஆண்ட்ரூஸ், வசந்தி, வினோத், சௌந்தர்ராஜன், சகாய நாதன், கரீம் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பிரதிநிதி பழனிச்சாமி நன்றி கூறினார்.

Related Stories:

>