பெரம்பூர்: வியாசர்பாடி பி கல்யாணபுரத்தை சேர்ந்தவர் தில்லையம்மாள் (80). ஆதம்பாக்கத்தை சேர்ந்தவர் மனோகரன் (60). இவர்கள் இருவரும், நேற்று மாலை பெரம்பூர் ரயில் நிலையம் எதிரே உள்ள பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு இருந்த காய்ந்த மரத்தில் கிளை உடைந்து இருவர் மீதும் விழுந்தது.
இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். உடனடியாக அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் இருவரையும் மீட்டு, பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இருவரும் அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து செம்பியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
