சென்னை உயர் நீதிமன்றத்திற்கு இன்று முதல் வரும் 31ம் தேதி, ஒரு மாதம் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர வழக்குகளை விசாரிக்க விடுமுறைக் கால அமர்வு அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரத்திலும் புதன், வியாழக் கிழமைகளில் சென்னை மற்றும் மதுரையில் விடுமுறைக் கால அமர்வு நீதிபதிகள் வழக்குகளை விசாரிப்பார்கள்.
