கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 ரவுடிகள் கைது

திருச்சி. ஏப்.30: மேல அம்பிகாபுரம் பகுதியில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் சூசையப்பார்பட்டி பகுதியை சேர்ந்தவர் கண்மணிராஜா(29), இவர் கடந்த ஏப்.28ம் தேதி மேல அம்பிகாபுரம் பகுதியில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த 2 ரவுடிகள் கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்து ரூ.1000 பணத்தை பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து பொன்மலை ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்த பிரசாந்த் (26), அரியமங்கலம் மேல அம்பிகாபுரம் அண்ணாநகரைச் சேர்ந்த தினேஷ் (27) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த ரூ.500 பணம் மற்றும் கத்தியை பறிமுதல் செய்தனர்.

 

Related Stories: