திருச்சியில் காதலியின் தந்தையை தாக்கியவர் கைது

திருச்சி, ஏப்.29:திருச்சியில் காதலியின் தந்தையை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருச்சி சங்கிலியாண்டபுரம் ஜின்னா தெருவை சேர்ந்தவர் ஜோஸ்வா(50). இவரது மகள் பாலக்கரை பகுதியைச் சேர்ந்த அஜய்ராஜ் என்பவரை கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த பெண்ணின் தந்தை அஜய்ராஜை கண்டித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஏப்.27ம் தேதி ஏற்பட்ட தகராறின்போது ஆத்திரமடைந்த அஜய்ராஜ் காதலியின் வீட்டிற்கு சென்று அவரது தந்தையை திட்டி கட்டையால் தாக்கியதாக தெரிகிறது. இதில் காயமடைந்த ஜோஸ்வாவை உறையூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் பாலக்கரை போலீசார் வழக்குபதிந்து பாலக்கரை செபஸ்தியார் கோவில் தெருவைச் சேர்ந்த அஜய்ராஜ் (26) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related Stories: