சமமபுரம், ஏப்.25: சமயபுரம் வெங்கங்குடி பகுதியில் ரோட்டோரமாக மூட்டை மூட்டையாக கொட்டப்பட்டு எரிக்கப்படும் குப்பைகளால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சமயபுரம் பகுதியில் உள்ள ஹோட்டல்கள், பூ கடைகள், தேநீர் விடுதி, பேக்கரி, மற்றும் இறைச்சி கடை கழிவுகள் மற்றும் குடியிருப்புகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் என பல்வேறு குப்பைகள் சேகரித்து அதை சமயபுரம் அடுத்துள்ள வெங்கங்குடி கிராமத்தில் உள்ள ராசையன் கோயில் என்ற இடத்தில் மண்ணச்சநல்லூர்-சமயபுரம் செல்லும் சாலையோரம் கொட்டப்படுகிறது.
இது அதிரமாக சேர்ந்து துர்நாற்றம் வீசுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், மேலும் குப்பைகளுக்கு தீ வைத்து எரிக்கின்றனர். சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதோடு, பொதுமக்களுக்கு சுவாச கோளாறு, டை ஆக்சின், ஹைட்ரோ குளோரிக் ஆசிட், சல்பர் டை ஆக்சைடு ஆகியன பொதுமக்களுக்கு பல்வேறு நோய்களை உருவாக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
அதிலும் டை ஆக்சின் என்பது உச்சபட்ச நோய்களை உருவாக்க வல்லதாகும். டை ஆக்சின் காற்றில் கலப்பதால் அனைத்து தரப்பினருக்கும் நோய் உருவாகும். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் இங்கு குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்தி தூய்மையாக வைத்திருக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
