திருச்சி, ஏப்.30: திருச்சியில் மே தினத்தை முன்னிட்டு நாளை ஒரு நாள் அனைத்து மதுபான சில்லறை விற்பனைக்கடைகளுக்கும் விடுமறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார். நாளை கொண்டாடப்படவுள்ள மே தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள் (FL-1) மற்றும் அதனுடன் இணைந்து இயங்கும் மதுக்கூடங்கள் மற்றும் FL-2/FL-2, FL-3, FL-3A, FL3AA மற்றும் FL-11 வரையிலான ஓட்டல் பார்களிலும், மதுபானம் விற்பனைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அன்றைய தினம் மதுபானங்களை விற்பனை செய்வது மற்றும் வேறு இடங்களுக்கு கொண்டு செல்வது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும், மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.
