துவரங்குறிச்சி, ஏப்.25: திருச்சி மாவட்டம் வளநாடு அருகே உள்ள காரணிப்பட்டியை சேர்ந்த சின்னத்துரை மகள் காவியா (19). பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். குடும்ப பிரச்னை காரணமாக மன உளைச்சலில் இருந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறியில் தூக்கு மாட்டிக் கொண்டார்.
அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கொடும்பாளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த வளநாடு போலீசார் உடலைக் கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
