அட்சய திருதியை முன்னிட்டு கைலாசநாதருக்கு சிறப்பு அலங்காரம்

 

லால்குடி, ஏப். 21: அட்சய திருதியை முன்னிட்டு கைலாசநாதருக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது.
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் கல்லகம் கிராமத்தில் அமைந்திருக்கும் கைலாசநாதர் மற்றும் காமாட்சி அம்மன் கோயில் அட்சய திதியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நேற்று நடைபெற்றது. பல லட்ச ரூபாய் நோட்டுகளால் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு 31 கிலோ எடை கொண்ட ஒரே லட்டு பிரசாதம் சாமிக்கு நெய்வேத்தியம் செய்யப்பட்டது.

Related Stories: