ஒன்றிய அரசு ஓரவஞ்சனை செய்தாலும்

 

திருச்சி, ஏப்.22: திராவிட மாடல் அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தோம், தமிழகத்தில் அனைத்து இடங்களில் திமுக அமோக வெற்றி பெற்று கழக தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவது உறுதி என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார். முன்னாள் அமைச்சர் அன்பில் மொய்யாமொழியின் மகன் அன்பில் மகேஷ் திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் முதலாவதாக தேர்தல் களம் கண்டு எம்எல்ஏவாக ஆனார். பிறகு இரண்டாவது முறையாக அதேதொகுதியில் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று பள்ளிக் கல்வி துறை அமைச்சராக பொறுப்பேற்றார். திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் திருவெறும்பூர் எம்எல்ஏவான இவர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றி கொடுத்து மக்களின் பேராதரவை பெற்றார்.

Related Stories: