மாற்றுப்பணி அறிவிக்காமல் திருவாரூர் எஸ்பி திடீர் மாற்றம்

திருவாரூர், பிப்.25: திருவாரூர் எஸ்பிக பணியாற்றி வந்த துரை நேற்று திடீரென மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக கயல்விழி என்பவர் எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். டிஐஜி ராஜேஷ்தாஸ், டிஐஜிக்கள் ஷகில்அக்தர், கரன்சின்கா மற்றும் திருவாரூர் எஸ்பியாக பணியாற்றி வரும் துரை ஆகியோரை நேற்று திடீரென உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் பிரபாகர் இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் திருவாரூர் மாவட்டத்திற்கு சென்னையில் மகளிர் மற்றும் குழந்தைகள் குற்றப்பிரிவு எஸ்பி ஆக பணியாற்றி வந்த கயல்விழி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். எஸ்பி துரை கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி நாகை மாவட்டத்திலிருந்து திருவாரூர் எஸ்பியாக பொறுப்பேற்றார். இந்நிலையில் நேற்று அவர் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன் இடமாற்ற உத்தரவில் மாற்றுப்பணி குறித்து தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>