கடையநல்லூர், தென்காசி, அம்பை தொகுதிகளில் திமுக சார்பில் போட்டியிட அய்யாத்துரை பாண்டியன் விருப்ப மனு

தென்காசி, பிப். 25:  சட்டப்பேரவைத் தேர்தலில் கடையநல்லூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தென்காசி தொகுதியில் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட விருப்ப மனுக்கள் தாக்கல் செய்த

வர்த்தக அணி மாநில துணைத்தலைவர் அய்யாத்துரை பாண்டியன், பின்னர் கடையநல்லூர், தென்காசி, அம்பை தொகுதிகளில் திமுக சார்பில் தனக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கக் கோரி சென்னையில் தலைமைக் கழக நிர்வாகிகளிடம் விருப்ப மனுக்கள் அளித்தார். இதே போல் அய்யாத்துரை பாண்டியன் கடையநல்லூர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து ஒன்றியச் செயலாளர்கள் ரவிசங்கர், ராமையா (எ) துரை, செங்கோட்டை நகரச் செயலாளர் ரஹீம், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் காசிதர்மம் துரை, லிங்கராஜ் , பேரூர் செயலாளர்கள் வெள்ளத்துரை, கோபால், சிதம்பரம், ராஜராஜன், இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ஹக்கீம், சிறுபான்மை பிரிவு மாவட்ட துணை அமைப்பாளர் விஸ்வா சுல்தான், மகளிர் அணி சபர்நிஷா, விமலாராணி, தமிழ்ச்செல்வி, உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட தலைவர் ஈஸ்வரன் உள்ளிட்டோர் விருப்ப மனுக்கள் வழங்கினர்.

 இதே போல் தென்காசி தொகுதியில் அய்யாத்துரை பாண்டியன் போட்டியிட விருப்பம் தெரிவித்து விவசாய அணி மாநில துணைச் செயலாளர் செல்லப்பா, தலைமை பொதுக்குழு உறுப்பினர் சக்தி, ஆதிதிராவிடர் நலப்பிரிவு மாவட்ட துணை அமைப்பாளர் கடல் சாமி, சுரண்டை பேரூர் துணைச் செயலாளர் பூல்பாண்டியன், சிறுபான்மை பிரிவு முன்னாள் மாவட்ட அமைப்பாளர் இஞ்சி இஸ்மாயில், வக்கீல் அணி முன்னாள் மாவட்ட அமைப்பாளர் அருள் விருப்பமனுக்கள் வழங்கினர்.

Related Stories:

>