2025-26 நிதியாண்டில் தேசிய நெடுஞ்சாலைகள் அமைப்பதில் இலக்கை தவற விட்ட ஒன்றிய அரசு

புதுடெல்லி: கடந்த நிதியாண்டில் தேசிய நெடுஞ்சாலை இலக்கை ஒன்றிய அரசாங்கம் தவற விட்டுள்ளது.
இதுதொடர்பாக ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி கூறுகையில், “நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் மற்றும் பிற அனுமதிகளை பெறுவதில் ஏற்பட்ட காலதாமதங்கள், சிக்கல்கள் காரணமாக இலக்கை எட்ட முடியவில்லை.

அதன்படி, தேசிய நெடுஞ்சாலை கட்டுமானம் 10,000 கிமீ என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் அது 9,380 கிமீயாக உள்ளது. இது கடந்த 2017-18ம் நிதியாண்டில் கட்டப்பட்ட 9,829 கிமீ என்ற அளவை விட மிக குறைந்த அளவாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம், 2024-25 நிதியாண்டில் 10,660 கிமீ, 2023-24ல் 12,349 கிமீ மற்றும் 2022-23 நிதியாண்டில் 10,331 தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன” என்றார்.

Related Stories: