நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்த மருத்துவர் மாரடைப்பால் பலி: தெலங்கானா மாநிலத்தில் சோகம்

திருமலை: தெலங்கானா மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்த மருத்துவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம், நிர்மல் மாவட்டம், பானிசா நகரில் ஒரு தனியார் மருத்துவமனையில், அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த சுரேந்தர் என்ற மருத்துவர், நேற்று முன்தினம் மதியம் நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்த மருத்துவருடன் இணைந்து, அவரும் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்தார்.

அப்போது திடீரென சுரேந்தர் மயங்கி விழுந்தார். இதைப்பார்த்த உடனிருந்த செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் உடனடியாக அவரை அறுவை சிகிச்சை அறையில் வெளியே கொண்டு சென்று, அருகில் உள்ள மருத்துவமனை முதலுதவி சிகிச்சை பிரிவுக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால், உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார்.

Related Stories: