திருச்சூர் வெடிவிபத்தில் மேலும் ஒருவர் சாவு: வாணவேடிக்கை நடத்த லைசென்ஸ் எடுத்தவர்

திருவனந்தபுரம்: திருச்சூர் வெடிவிபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் நேற்று உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது. விபத்து நடந்த இடத்திலிருந்து இதுவரை 120க்கும் மேற்பட்ட உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. திருச்சூர் பூரம் திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் வாணவேடிக்கை நிகழ்ச்சிக்காக பட்டாசு தயாரித்தபோது கடந்த சில தினங்களுக்கு முன் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

இதில் 13 பேர் கருகி உயிரிழந்தனர். 14 பேர் திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் ஒருவரும், நேற்று சதீசன் (46) என்பவரும் உயிரிழந்தனர். சதீசன் தான் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடத்துவதற்கு லைசென்ஸ் எடுத்திருந்தார்.

கோயில்களில் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடத்துவதில் இவருக்கு பல வருட அனுபவம் உண்டு. ஏராளமான கோயில்களில் இவர் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடத்தியுள்ளார். இதற்கிடையே நேற்றும் விபத்து நடந்த இடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதுவரை 120க்கும் மேற்பட்ட உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை டிஎன்ஏ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Related Stories: