பெட்ரோல், டீசல் விலை உயர்வு கண்டித்து ஆர்ப்பாட்டம் வேலூரில் எஸ்டிடியு சார்பில்

வேலூர், பிப்.24: வேலூரில் எஸ்டிடியு சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எஸ்டிடியு சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு கண்டித்து வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் செய்யது சலீம் தலைமை தாங்கினார். எஸ்டிபிஐ மாநில செயற்குழு உறுப்பினர் ஷேக்மிரான், மாவட்ட தலைவர் பயாஸ் அகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். எஸ்டிடியு மாவட்ட செயலாளர் அஷரப் வரவேற்றார். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும், பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கடுமையாக உயர்த்திய மத்திய பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளாமனோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>