கால்வாய் அமைக்க இடையூறாக இருந்த 10 கடைகள் இடித்து அகற்றம் வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில்

வேலூர், பிப்.24:வேலூர் கோர்ட் அருகே கால்வாய் கட்ட இடையூறாக இருந்த 10 கடைகள் இடித்து அகற்றப்பட்டது.வேலூர் மாநகராட்சி 2வது மண்டலம் சத்துவாச்சாரி கோர்ட் அருகே உள்ள சாலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், கால்வாய் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த கால்வாய் கட்டும் பணிக்கு அந்த சாலையில் உள்ள 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மாநகராட்சிக்கு சொந்தமான 10 கடைகள் இடையூறாக உள்ளது. இதனால் பணிகள் நிறுத்தப்பட்டிருந்தது. இக்கடைகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து கமிஷனர் சங்கரன் உத்தரவின்பேரில் மேற்கண்ட கடை வாடகைதாரர்களை காலி செய்யும்படி, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து 2வது மண்டல உதவி கமிஷனர் மதிவாணன் தலைமையிலான மாநகராட்சி ஊழியர்கள் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் ஜேசிபி மூலம் 10 கடைகளை இடித்து அகற்றினர். இங்கு கடை வைத்துள்ளவர்கள் கலெக்டர் அலுவலகம் எதிரே ஆஞ்சநேயர் கோயில் அருகே கட்டப்படும் மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் கடைகளை வாடகை ஏலம் எடுத்து நடத்திக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டது.

Related Stories: