பந்தலூர் அம்பேத்கர் நகரில் குடிநீர் தட்டுப்பாடு

பந்தலூர், பிப். 24: பந்தலூர் அம்பேத்கர் நகர் மற்றும் அண்ணாநகர் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

பந்தலூர் அம்பேத்கர் நகர் மற்றும் அண்ணா நகர் பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்காக நிரந்தரமான குடிநீர் திட்டங்கள் எதுவும் இல்லாததால் கோடை காலத்தில் போதிய குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் குடிநீர் கிணறுகளில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், நெல்லியாளம் நகராட்சி மூலம் வீடுகளுக்கு கட்டணம் செலுத்தி குடிநீர் இணைப்புகள் பெற்றிருப்பவர்களுக்கும் முறையாக குடிநீர் விநியோகம் இல்லாமல் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.    வாரத்தில் ஓரு இரு நாட்கள் வரும் குழாய் தண்ணீர் மாசுபட்டு அழுக்குடன் விநியோகம் செய்வதால் மேலும் பாதிப்பு ஏற்படுவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.எனவே நெல்லியாளம் நகராட்சி நிர்வாகம் நிரந்தரமாக இப்பகுதி மக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories:

>