திமுக பாடல் ஒளிபரப்பி இளைஞர்கள் நடனம் ‘ஸ்டாலின் தான் வராரு விடியல் தர போறாரு’

கலசபாக்கம், பிப்.23: ஸ்டாலின் தான் வரலாறு விடியல் தர போறாரு என்ற திமுக பாடல் கலசபாக்கம் ஒன்றியத்தில் ஒளிபரப்பி இளைஞர்கள் நடனமாடினர். கலசபாக்கம் ஒன்றியத்தில் பழங்கோவில் பூண்டி மோட்டூர் தென்பள்ளிப்பட்டு, கலசபாக்கம், தென் மகாதேவமங்கலம், கடலாடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கலசபாக்கம் ஒன்றிய திமுக சார்பில் ஸ்டாலின் தான் வராரு விடியல் தர போறாரு எனும் திமுக பாடல் ஒளிபரப்பி இளைஞர்கள் நடனமாடினர். இது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், ஒரு சில கிராமங்களில் பொதுமக்களும் பாடல் கேட்டு உற்சாக நடனம் ஆடினர். அதேபோல் வீட்டிலிருந்த சிறுவர்களும் ஸ்டாலின் தான் வராரு விடியல் தர போறாரு பாடலைப் பாடி நடனமாடினர். நிகழ்ச்சியில் ஒன்றிய திமுக செயலாளர்கள் அ.சிவக்குமார் வக்கீல் க.சுப்பிரமணியன், ஒன்றியக்குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன் மற்றும் ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

Related Stories:

>