திமுக சார்பில் திண்ணை பிரசாரம்

ஓமலூர், பிப்.23: ஓமலூர் வடக்கு ஒன்றியத்தில், திமுக சாதனைகளை விளக்கி திண்ணை பிரசாரம் நடைபெற்றது. ஒன்றிய பொறுப்பாளர் பாலசுப்பிரமணியம் தலைமையில், ஒவ்வொரு கிராம பஞ்சாயத்தில் திமுக ஆட்சி காலத்தில் செய்யப்பட்ட சாதனைகள், தலைவர் ஸ்டாலின் வாக்குறுதிகள், அவர் செய்து வரும் மக்கள் நலப்பணிகளை விளக்கும் வகையில், பிரசாரம் மற்றும் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் திருநாவுக்கரசு, மாவட்ட பிரதிநிதிகள் ராஜா, ஜெயவேல், ஒன்றிய கவுன்சிலர்கள் சிவஞானவேல், துரைசாமி, நிர்வாகிகள் மோகன்ராஜ், அண்ணாதுரை, மொலாண்டிபட்டி மணி, கோவிந்தராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>