₹4 லட்சம் கடன் வாங்கி மோசடி; சமூக ஆர்வலர் மனு

சேலம், பிப்.23:நாமக்கல் மாவட்டம் நா. புதுப்பட்டி லத்துவாடி ரோட்டை சேர்ந்தவர் அன்புசார்லஸ். சமூக ஆர்வலரான இவர் நேற்று சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில், சேலத்தில் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவரும், அவரது கணவரும் சேர்ந்து தன்னிடம் இருந்து கடனாக ₹4 லட்சத்தை பெற்றனர். அந்த பணத்தை தராமல் ஏமாற்றி வருகின்றனர். இது தொடர்பாக கல்வி அதிகாரியிடம் புகார் அளித்தேன். அவர்களும் சரியாக விசாரிக்கவில்லை. எனவே, தனது பணத்தை தம்பதியிடம் இருந்து வாங்கி தரவேண்டும். இல்லைனெில், சேலம் மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு தற்கொலை செய்து கொள்ள அனுமதி வழங்க வேண்டும்,என அந்த மனுவில் கூறியுள்ளார்.

Related Stories:

>