ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

தா.பழூர், ஏப்.17: அரியலூர் மாவட்டம் அமீனாபாத் கிராமத்தைச் சேர்ந்தவர் மருதமுத்து இவரது மனைவி அமராவதி (65). இவர் விக்கிரமங்கலம் அம்பாபூர் கிராமத்தில் நடைபெற்ற ஒரு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அமீனாபாத்தில் இருந்து அம்பாப்பூர் கிராமத்திற்கு பயணிகள் ஆட்டோவில் சென்றுள்ளார். அப்போது, வி.கைகாட்டி அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக ஆட்டோவில் இருந்து தவறி அமராவதி கீழே விழுந்துள்ளார். இதில் அமராவதிக்கு தலை மற்றும் நெற்றி பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

பின்னர், அங்கிருந்தவர்கள் அமராவதியை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அமராவதியை பரிசோதித்த மருத்துவர்கள் அமராவதி ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறிவிட்டனர். இது குறித்து விக்கிரமங்கலம் போலீசில் அமராவதியின் மகள் அன்பரசி கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் வழக்கு பதிவு செய்து பயணிகள் ஆட்டோவை ஓட்டிச் சென்ற சாளைக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திரன் (45) என்பவரை கைது செய்து ஆட்டோவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

Related Stories: