வடக்கலூர் கிராமத்தில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

குன்னம், ஏப்.17: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வடக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த அரசன் மகன் கமல் (35) என்பவர், தனது தெருவில் பஞ்சாயத்து நிர்வாகத்தால் அமைக்கப்பட்டு இருந்த சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டி மின் மோட்டாரை குளிப்பதற்காக போட்ட போது மின்சாரம் தாக்கி பரிதாபமாக பலியானார்.

இவரது இறப்பிற்கு பஞ்சாயத்து நிர்வாகத்தின் அலட்சியப் போக்கு காரணம் என குற்றம் சாட்டி வேப்பூர் மருத்துவமனையில் இவரது குடும்பத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது குறித்து மங்களமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

Related Stories: