பாஜகவினால் தமிழ் மொழிக்கு ஆபத்து வந்திருக்கிறது, உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு..!!

மதுரை: நேற்று விருதுநகர் மாவட்டத்தில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு நள்ளிரவு மதுரைக்கு வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திமுக கூட்டணி கட்சியான மதசார்பற்ற முற்போக்கு கட்சி வெற்றி வேட்பாளர் மூர்த்தியை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

மதுரை மக்கள் மிகவும் பாசக்காரர்கள்,கோவக்காரர்கள். உங்களது பாசத்திற்கும், கோவத்திற்கும் நியாயம் அதிகம். வருகின்ற தேர்தலில் உங்களது பாசத்தை கொண்டு நமது திமுக கூட்டணி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி வேட்பாளர் மூர்த்தி அவர்களுக்கு உதயசூரியன் சினத்திலே அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறவைக்க வேண்டும்.

சங்கம் வைத்து தமிழை வளர்த்தது மதுரை என மதுரை மண்ணின் பெருமைகளை எடுத்துரைத்தார் . இன்றைக்கு பாஜகவினால் தமிழ் மொழிக்கு ஆபத்து வந்திருக்கிறது , நம்முடைய தமிழ்நாட்டிற்கும் ஆபத்து வந்திருக்கிறது மற்றும் தமிழ்நாட்டின் உரிமைகளுக்கும் ஆபத்து வந்துயிருக்கிறது.

தமிழ்நாட்டை பாதுகாக்கின்ற தேர்தல் தான் வருகின்ற சட்டமன்ற தேர்தல். மதுரை மக்கள் எப்பொழும் விழிப்புணர்வோடு இருப்பீர்கள் என்றும் அதனால் தான் மதுரை எப்பொழுதும் தூங்காநகரம் என்று கூறுவர். அரசியல் விழிப்புணர்ச்சியில் இந்த மதுரை தான் தூங்காநகரம். கடந்த சட்டமற்ற தேர்தலின்போது இதே மதுரையிலேருந்துதான் எய்ம்ஸ் செங்கல்லை எடுத்துச்சென்று தமிழ்நாடு முழுக்க பிரச்சாரம் செய்தேன். ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டிற்கு எந்த திட்டத்தையும் கொடுப்பது இல்லை, எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல்நாட்டி 11 ஆண்டுகளானது ஆனால் இப்போது வரை திறக்கப்படவில்லை என்றார்.

திமுகவின் வேட்பாளரான மூர்த்தி அவர்கள் படிப்படியாக இளைஞர் அணியிலிருந்து கழகப்பணியாற்றி முன்வந்தவர். இளைஞர் அணியில் பணியாற்றி ஒன்றிய செயலாளராகவும் பின்னர் மாவட்ட செயலாளராகவும் இப்போது சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் என உழைப்பின் மூலம் படிப்படியாக முன்னேறியவர், தலைவரின் அன்பை பெற்றவர் பாசத்தை பெற்றவர் குறிப்பாக மதுரை மக்களான உங்களுடைய நம்பிக்கையை பெற்றவர் என கூறி வாக்குகளை சேகரித்தார்.

பல திட்டங்களை மதுரை தொகுதிக்கு கொண்டுவந்தவர் மூர்த்தி. மேலும் சத்திரப்பட்டி , காவனுர்,குலமங்கலம் மற்றும் வீரபாண்டி உள்ளிட்ட 900 ஊராட்சிகளுக்கு ரூ.1600 கோடி ஒதுக்கீட்டில் இன்று பிரம்மாண்ட கூட்டுகுடிநீர் திட்டம், மதுரை கொச்சி சாலையில் போக்குவரத்து வசதிக்காக ரூ.53 கோடி ஒதுக்கப்பட்டு புதிய மேம்பாலம் கட்டப்பட்டிருக்கிறது, சத்தியமங்கலத்தில் ரூ.98 கோடி மதிப்பிலான பல மாநில தொழில்துறை எஸ்டேட் அமைக்கப்பட்டிருக்கிறது. ரூ.111 கோடி மதிப்பீட்டில் திண்டுக்கல் சாலை வரை தெப்பக்குளம் வரை வைகை தென்துறை சாலை போடப்பட்டிருக்கிறது, ரூ.84 கோடி மதிப்பீட்டில் மதுரை கிழக்கு ஒன்றியத்தில் 158 கிலோமீட்டர் நீளத்திற்கு கிராமசாலைகள் மேன்படுத்தப்பட்டிருக்கிறது. மாலைப்பட்டி ஊராட்சியில் புதிய நியாய விலை கடை, நீர்த்தேக்க தொட்டி மற்றும் குடிநீர்குழாய் இணைப்புகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

கிழக்கு ஒன்றிய பகுதியில் ரூ.2 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டமைப்பு அமைக்கப்பட்டுடிருக்கிறது. சத்திரப்பட்டி ஊராட்சியில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் 161 குடிநீர்குழாய் இணைப்புகள் அமைக்கப்பட்டுடிருக்கிறது. திருமோகூர் ஊராட்சியில் புதிய கிராம மகளிர் குளு தொழிற்குடம் என பல திட்டங்களை கொண்டுவந்த மூர்த்திக்கு வாக்கு சேர்த்தார் உதயநிதி ஸ்டாலின்.

அதேபோல, இந்த சட்டமன்ற தேர்தல் டெல்லி அணியா தமிழ்நாட்டு அணியா? தமிழ்நாடு அணி நாம் வெற்றி பெற வேண்டும் டெல்லி அணியை வீழ்த்தவேண்டும் என்றார் உதயநிதி. ஒன்றிய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு கண்டனம் தெரிவித்து பேசினார் .பின்னர் தேர்தல் வாக்குறுதியை விவரித்தார். மகளிர் உரிமை தொகை ஆயிரத்தில் இருந்து ரூ.2000மாக உயர்த்தப்படும், காலை உணவு திட்டம் அரசு பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு 5ஆம் வகுப்பு வரை இருந்ததை 8ஆம் வகுப்பு வரை உயர்த்தப்போகிறோம் ,அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை ரூ.1000 தில் இருந்து ரூ .1500 மாக உயர்த்தப்படும், முதியோர் உதவி தொகை ரூ.1200 தில் இருந்து ரூ .2000 மாக உயர்த்தப்படும், 50 லட்சம் இளைஞர்களுக்கு அடுத்த 5 ஆண்டுகள் வேலைவாய்ப்பு திட்டம், அடுத்த 5 ஆண்டுகளில் 35 லட்சம் மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்படும்.அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் கலைஞர் கனவு இல்லம் கட்டப்பட்டு வீடு இல்லாதோருக்கு வீடு வழங்கப்படும், ஆட்சி அமைத்தவுடன் ஒவ்வொரு மகளிரின் கைகளிலும் ரூ.8 ஆயிரம் மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படும் அதை பயன்படுத்தி மின்சாதன பொருட்கள் வாங்கிக்கொள்ளலாம் என பேசினார்.

Related Stories: