சென்னை: திராவிட மாடல் ஆட்சியில் மீனவர்களுக்கு ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக திமுக சார்பில் சாதனை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அச் சாதனைகளின் சில அம்சங்கள்:
* இலங்கை கடற்படை கைப்பற்றி சேதமடைந்த 180 விசைப்படகுகளுக்கும், 25 நாட்டுப்படகுகளுக்கும் ரூ.12.76 கோடி நிவாரணம் முதல்வர் வழங்கியுள்ளார். மீன் பிடிக்கச் சென்று காணாமல் போகும் மீனவர் குடும்பத்திற்கு தினமும் வழங்கப்படும் இழப்பீடு ரூ.250-ஐ ரூ.500 என உயர்த்தியுள்ளார்.
* மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.5,000 என்பதை ரூ.8,000 ஆக உயர்த்தியுள்ளார். இதனால் 8,76,032 மீனவ குடும்பங்கள் பயன் அடைவார்கள். மீன்பிடி குறைவு கால நிவாரணம் ரூ.5,000 என்பதை ரூ.6,000 ஆக உயர்த்தியுள்ளார். இதனால் 9,13,394 மீனவ குடும்பங்கள் பயனடைவார்கள். கடல் மீனவர் சேமிப்பு திட்டத்தின் கீழ் ரூ.304.61 கோடி நிவாரணம், இதனால் 10,17,226 மீனவர்கள் பயனடைவர். கடல் மீனவ மகளிர் சேமிப்பு திட்டத்தில் ரூ.301.02 கோடி நிவாரணம். இதனால் 10,05,390 மீனவ மகளிர் பயன்பெறுவர்.
* கடலில் மீன்பிடிக்கச் சென்று காணாமல் போகும் மீனவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் தின உதவித்தொகை ரூ.250 என்பது ரூ.350 ஆக உயர்த்தப்பட்டு ஒரு மீனவ குடும்பத்திற்கு மாதம் ஒன்றிற்கு ரூ.10,500 வீதம் வழங்கப்படுகிறது. இந்த தின உதவித்தொகை ரூ.350 என்பது ரூ.500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் மு.ஸ்டாலின் அறிவித்தபடி, 2025-2026ம் ஆண்டு முதல் உயர்த்தி வழங்கப்படுகிறது.
* 1.6.2020 முதல் 18.10.2021 வரை மீனவர் காப்பீடு இல்லாத காலத்தில் மீன் பிடிக்கச் சென்று உயிர் இழந்த 205 மீனவர் குடும்பங்களுக்கு விபத்து காப்பீடு நிவாரணத் தொகை தலா ரூ.2 லட்சம் வீதம் மொத்தம் ரூ.4.10 கோடி வழங்கப்பட்டுள்ளது. நிரந்தர ஊனமடைந்த ஒரு மீனவருக்கு ரூ.1 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
* 5.12.2023 அன்று எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் கச்சா எண்ணெய் கலந்ததால் எண்ணூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்களின் சேதமடைந்த படகுகள், வலைகளுக்காக ரூ3.66 கோடி நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
* 4.12.2023 அன்று மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட மீனவர்களின் படகுகள் முதலியவற்றிற்கான வாடகை கட்டணம்; பணியில் ஈடுபட்டிருந்த மீனவர்களுக்கு செலவினம் என ரூ.1.70 கோடி வழங்கப்பட்டதுடன்; சேதமடைந்த மீன்பிடி படகுகளுக்காகவும் ரூ.12.88 கோடி நிவாரணம் வழங்கப்பட்டது.
* 15.12.2023 முதல் 17.12.2023 வரை தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பெய்த மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காக ஈடுபடுத்தப்பட்ட படகுகள் முதலியவற்றிற்கு ரூ.99 லட்சமும், சேதமடைந்த மீன்பிடி படகுகளுக்காக ரூ.14.53 கோடியும் நிவாரணமாக வழங்கப்பட்டது.
* 2024ம் ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் பெஞ்சல் புயலின்போது மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட 300 படகுகள் மற்றும் 648 மீனவர்களுக்கு செலவினம் ரூ.90 லட்சமும், சேதமடைந்த மீன்பிடி படகுகளுக்கு ரூ.2.537 கோடி இழப்பீட்டும் வழங்கப்பட்டது.
* தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்தின் மூலம் மீனவர் குழு விபத்து காப்புறுதி திட்டத்தின் கீழ் விபத்தில் இறந்த மீனவருக்கு தலா ரூ.5 லட்சமும், விபத்தில் ஊனமடைந்த மீனவருக்கு ரூ.2.50 லட்சமும், காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மீனவருக்கு ரூ.25 ஆயிரம் வீதமும் வழங்கப்படும் நிவாரணத்தின்படி; 2021 முதல் 4 ஆண்டுகளில் மாநில அரசின் 40 சதவீதத் தொகையாக ரூ.6.82 கோடி வழங்கப்பட்டுள்ளது.
* மீனவர் குழு விபத்து காப்புறுதி திட்டத்தின் கீழ் 2021 முதல் இதுவரை மீன்பிடிக்கச் சென்று விபத்தில் இறந்த மற்றும் காயமடைந்த 482 மீனவர்களின் குடும்பத்திற்கு ரூ.23.31 கோடி காப்புறுதி நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
* மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை ரூ.5 ஆயிரம் என்பது ரூ.8 ஆயிரமாக உயர்த்தப்பட்டு 8,76,032 மீனவ குடும்பங்களுக்கு ரூ.545.83 கோடி நிவாரணத் தொகை வழஙகப்பட்டுள்ளது.
* 2022 -2023ம் ஆண்டு முதல் திராவிட மாடல் அரசின் திட்டமாக செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ் 10,17,226 மீனவர்களுக்கு ரூ.304.61 கோடி நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது.
* 2021 -2022ம் ஆண்டு முதல், இத்திட்டத்தின் கீழ் 10,05,390 மீனவ மகளிருக்கு ரூ.301.02 கோடி நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது.
* பாரம்பரிய மீன்பிடி கலன்களை இயந்திரமயமாக்கும் திட்டம் கீழ் 3,591 பேர் 40 சதவீத மானியத்தில் மொத்தம் ரூ.21.6 கோடி மதிப்பில் உள் பொருத்தும், வெளிப் பொருத்தும் இயந்திரங்கள் மீனவர்களுக்கு வழங்கப்பட்டன.
* பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களுக்கு 75 விழுக்காடு மானியத்தில் ரூ.4.49 கோடியில் 40 ஆயிரம் உயிர்க்காப்பு சட்டைகள் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
* தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மண்ணெண்ணெயில் இயங்கும் இயந்திரங்களை திரவ எரிவாயு மூலம் இயங்கும் இயந்திரங்களாக மாற்றும் திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக 175 மண்ணெண்ணெய் இயந்திரங்களை ரூ.1.90 கோடி மதிப்பீட்டில் மாற்றம் செய்திட அனுமதிக்கப்பட்டு மீனவப் பயனாளிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
* 7 கடலோர மாவட்டங்களில் ரூ.742.96 கோடியில் மீன்பிடி இறங்கு தளங்கள், தூண்டில் வளைவுகள், கடலரிப்பை தடுக்கும் அமைப்புகள் ஆகியவை 44 இடங்களில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
* கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுகம் அலைத் தடுப்பு சுவர் நீட்டிப்பு பணி ரூ.116 கோடி செலவில் நடைபெற்று வருகிறது.
* புதிய மீன்பண்ணை கட்டுமானம், புனரமைத்தல், நவீனமயமாக்கம் பணிகள் ரூ.60.20 கோடி மதிப்பில் நடைபெற்று வருகின்றன.
* தூத்துக்குடி மற்றும் மேட்டூர் அணையில் பயிற்சி மையத்துடன் கூடிய ஒருங்கிணைந்த அலுவலக கட்டிடம் கட்டும் பணி ரூ.8 கோடி செலவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
* நெல்லை மாவட்டத்தில் வண்ண மீன் காட்சியகம் மற்றம் வண்ண மீன் சில்லரை விற்பனையகம் ரூ.5 கோடி செலவில் அமைக்கப்பட்டு வருகிறது.
* திருவள்ளூர், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் 13 கிராமங்களில் ரூ.56 கோடி செலவில் புதிதாக மீன் இறங்கு தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
* இளநிலை பட்டப்படிப்புகளில் மீனவ சமுதாயத்தை சேர்ந்த 250 மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டத்தின் கீழும், அதேபோல 143 மாணவர்கள் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழும் மாதம் ரூ.1000 பெற்றுப் பயனடைந்துள்ளனர்.
