திமுக மாவட்ட செயலாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நண்பகல் 12 மணிக்கு அவசர ஆலோசனை!

 

சென்னை: திமுக மாவட்ட செயலாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நண்பகல் 12 மணிக்கு அவசர ஆலோசனை நடத்தவுள்ளார். இது தேர்தல் காலம்தானே, இவர்கள் கவனம் அதில்தான் இருக்கும், நாம் டெல்லியில் சைலண்டாக தமிழ்நாட்டின் தொகுதி மறுவரையறை செய்து விடலாம் என்று மட்டும் நினைக்கவே நினைக்காதீர்கள். நீங்கள் இதுவரை பார்க்காத தமிழ்நாட்டை பார்க்க வேண்டியிருக்கும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இறுதி எச்சரிக்கை விடுத்திருந்தார்.

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கூட்டப்படவுள்ள நிலையில், தொகுதி மறுவரையறை குறித்து, திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று சமூக வலைத்தளப் பதிவு ஒன்று வெளியிட்டிருந்தார். இதையடுத்து, திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தொகுதி மறுவரையறை சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளதால் அவசர ஆலோசனை நடைபெறுகிறது.

தொகுதி மறுவரையறையில் தமிழ்நாடு சந்திக்கவுள்ள பாதிப்புகள் குறித்து திமுக எம்.பிக்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, மக்களவைத் தொகுதிகளை 850 ஆக அதிகரிக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. அவசரக அவசரமாக “Delimitation” செய்ய நினைப்பது, பா.ஜ.க. அரசின் அப்பட்டமான ஜனநாயக விரோதச் செயல் என தெரிவித்தார்.

இந்நிலையில், திமுக மாவட்ட செயலாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நண்பகல் 12 மணிக்கு அவசர ஆலோசனை நடத்தவுள்ளார். தொகுதி மறுவரையறையில் தமிழ்நாடு சந்திக்கவுள்ள பாதிப்புகள் குறித்து விவாதிக்க அவசர மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. தொகுதி மறுவரையறை தொடர்பாக எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்திய நிலையில் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.

 

Related Stories: